நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

சிறு வயதில் எனக்கு கவிதை எழுதிப் பழக ஆர்வம் மிகுந்த தருணம் நான் சில வரிகளை கிறுக்க முற்பட்டேன்.. தமிழாசிரியரான எனது அன்னையார் கவிதை எழுத சில அடிப்படையான விஷயங்களை எனக்கு எடுத்துக் கூறி எனக்கு வழி காட்டினார் .... எதுகை, மோனை , இயைபு மற்றும் சீர் போன்ற அடிப்படையோடு எழுதப்படும் மரபுக்கவிதைக்கு தனி மதிப்பு உண்டு என புரிய வைத்தார்...
எனது ஆரம்ப கால கவிதைப் பயிற்சிக்கு கிடைத்த தலைப்பு தான் "நட்சத்திரங்கள்" இந்த என் சிறுவயது கவிதை சிறுபிள்ளைத்தனமாக தோன்றினாலும் எனக்குள் இருக்கும் தமிழ் அறிவு வெளிப்பட ஒரு கருவியாக அமைந்தது ... அக் கவிதை இதோ !

முத்துப் பல் காட்டி
நித்தம் அமுதூட்டி
சித்தம் மெருகேற்றி
சிந்தை ஒளி கூட்டி
கத்தும் கடல் பார்த்து
கண் சிமிட்டும் காரிகையே
முத்துத் தாரகையே
முழுமதியின் தோள்வரையே!
வானதேவன் வாரியிறைத்த
வைரச் சிதறல்கள்
பட்டத்து ராணியின்
தோட்டத்தில் உலவிடும் மின்மினிப் பூச்சிகள்
உலா வரும் நிலாப் பெண்ணின்
உதிர்ந்துவிட்ட கூந்தல் மலர்கள்
அண்ணாந்து பார்த்தவர் -இது போல்
ஆயிரம் கதை சொல்வார் உனைவைத்து..
நித்திலமாய் ஒளி வீசும் தாரகையே- இனி
நீயும் ஒர் பரட்சித் தலைவி !

Comments

Popular posts from this blog

தாமரையின் காதல்

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்