சாய் குறள் மாலை
1. சாய்நாமம் போற்றிப் புகழ்ந்து வணங்கியோர் நோயின்றி எய்துவர் நூறு. 2. சாய்பாதம் பற்றியோர் பெற்ற புகழனைத்தும் துய்யவாழ்வில் நிற்கும் துணை. 3. கருணைக் கரசராம் சாய்மகான் போற்றி பெருமை ஏற்கும் உலகு. 4. சாய்யின் வடிவம் அகத்தே பொதிந்தார்கு மாயை வெறுக்கும் மனது. 5. ஏழை வடிவத்து வள்ளல் வழங்குவார் ஏந்தும் கரங்களில் உய்வு. 6. நெஞ்சத்துத் தூயவர் சாய்மடி சேர்ந்தார்க்கு பஞ்சம் அகலுமே காண். 7. வெஞ்சினம் வென்றவர் சாய்வழி நின்றவர் நெஞ்சம் அடையும் உயர்வு. 8. வறியோர் பசியும் வருத்தும் பிணியும் நொடிக்குள் மறைத்தவர் சாய். 9. சாய்கழல் பற்றினார் சீரடி சேர்ந்தார்க்கு நோய்நொடி என்றும் இல. 10. வான்மழை ஓங்கி வளமை பெருக்குமே நான்மறை சாய்தொழும் நாடு. 11. சீரடி பெற்றசீர் சித்தராம் சாய்மகான் சீர்மிகு மானிடர் பேறு. 12. கார்முகில் வந்து கழனி சிறக்குமாம் சீர்வளர் சாய்நல் வரவு. 13. வாய்மை எளிமை எளியோர்க் கருள்செயும் சாய்யருள் பூசனை நன்று. 14. சாய்முகம் காணவே ஏங்கும் அடியவர் தாய்முகம் கண்ட மகவு. 15. காணும் பொருளில் பலவுருத் தோற்றமாய்க் காட்சி தருபவர் சாய். 16. மாதவச...