தமிழ்த் திருநாள் வாழ்த்து
குலமுயரும்
நலமுயரும் - குவலயத்தில்
குன்றாது வளமுயரும்,
வானுயரும்
வாழ்வுயரும் - தமிழர் தம்
கோலுயரும் குடியுயரும்,
மண்டியிடா
மாண்புயரும்- மாநிலத்தில்
மானமிகு மொழியுயரும்,
சீறுயரும்
சிறப்புயரும்- சிந்தையிலே
சிங்கநிகர் நினைப்புயரும்,
நீருயரும்
நெல்லுயரும் - நெடிதுவளர்
தென்னைபனை மீண்டுயரும்,
இமயம்வரை
கொடியுயரும் - இணையம் எங்கும்
நம்மக்கள் நட்புயரும்,
பொங்கிவரும்
பொருளும்வரும்- இப்பொங்கல்முதல்
மங்காத வளமுயரும்,
பகலவன்போல் வாழ்வுயரும்
தாழ்வகலும் தரமுயரும் - தரணி போற்றும்
வரமருளும் தமிழ்த்திருநாள் வாழ்த்துக்கள்!"
நட்புடன்
கோ.பார்த்தசாரதி
Comments
Post a Comment