வனிதையர் உலகமோ!
இது எனது பெங்களுர் வாழ்வின் மாறுபட்ட உணர்வு... இங்கு கண்ட பெண்ணியம் மாண்பு நான் வேறெங்கும் கண்டதில்லை.. அதன் வெளிப்பாடு தான் இக் கவிதை...
**வனிதையர் உலகம் **
கவின் மலர்த் தோட்டமோ?!
புவிவந்த நிலாக் கூட்டமோ?!
மாந்தளிர் வண்ணமோ?!- வருடும்
தேன் தமிழ்த்தென்றலோ?!
கனி இதழ் மொழிகளோ- இமயப்
பனி யெனக் குளிருதே!
இதுவோர் வனிதையர் உலகமோ?! - மதுரக்
கனி தரும் சோலையோ?!
இனியொரு அழகுதான்- உலகிலே
இருக்குமோ சொல் இயற்கையே!
பெங்களூர் பெண்கள்-அழகிலே
மயங்குதே காளையர் கண்கள்!
நிமிர்ந்து நோக்கும் விழிகளின் வீச்சிலும்
இனிந்து உதிர்க்கும் பன்மொழிப் பேச்சிலும்
புலவன் பாரதி கண்டகனவு
புதுமைப் பெண்களாய் பூத்ததே இங்கு !
ஒளி திகழ் அறிவிலும்
மதி முகப்பொலிவிலும்
அணி நிறை நட்பிலும்
பணி செயும் மாண்பிலும்
மான் விழி வீச்சிலும்- இங்கு
ஆண் குலம் தோற்றதே !தோற்றதே !
**வனிதையர் உலகம் **
கவின் மலர்த் தோட்டமோ?!
புவிவந்த நிலாக் கூட்டமோ?!
மாந்தளிர் வண்ணமோ?!- வருடும்
தேன் தமிழ்த்தென்றலோ?!
கனி இதழ் மொழிகளோ- இமயப்
பனி யெனக் குளிருதே!
இதுவோர் வனிதையர் உலகமோ?! - மதுரக்
கனி தரும் சோலையோ?!
இனியொரு அழகுதான்- உலகிலே
இருக்குமோ சொல் இயற்கையே!
பெங்களூர் பெண்கள்-அழகிலே
மயங்குதே காளையர் கண்கள்!
நிமிர்ந்து நோக்கும் விழிகளின் வீச்சிலும்
இனிந்து உதிர்க்கும் பன்மொழிப் பேச்சிலும்
புலவன் பாரதி கண்டகனவு
புதுமைப் பெண்களாய் பூத்ததே இங்கு !
ஒளி திகழ் அறிவிலும்
மதி முகப்பொலிவிலும்
அணி நிறை நட்பிலும்
பணி செயும் மாண்பிலும்
மான் விழி வீச்சிலும்- இங்கு
ஆண் குலம் தோற்றதே !தோற்றதே !


Comments
Post a Comment