Posts

Showing posts from July 15, 2019

மனம் குளிரும் மழை அழகு

Image
அது என் கல்லூரி வாழ்க்கையின் முதலாம் ஆண்டு . 1994 மேல்மருவத்தூர் சூழல் எனக்கு புதுமையானது. வெளியெங்கும் ஆளரவமற்ற தனிமை குடிகொண்டிருக்கும். நண்பர்களை விட்டால் வேறு உலகத் தொடர்பே இருக்காது. நல்ல வேளை அப்போது ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் தான் எனது கல்லூரி வாழ்க்கை எனக்கு ஏராளமான அன்பு நண்பர்களைப் பெற்றுத் தந்தது... ஒரு முறை ஒரு அழகிய மழைக்காலத்தில் என் கவிஆர்வம் துளிர் விட இந்த கவிதையை எழுதினேன்.. என் நண்பர்கள் வெகுவாக பாராட்டி... மறுநாள் கல்லூரி வகுப்பு நேரத்தில் ஆசிரியரிடம் கூறிவிட்டார்கள். அவரும் ஆர்வமிகுதியில் நண்பனை அனுப்பி விடுதியிலிருந்து எனது கவிதைப் புத்தகத்தை எடுத்துவரச் செய்து வகுப்பறையில் அனைவர் மத்தியில் உரக்கப் படிக்கச் சொன்னார். அப்போது அனைவரது பாராட்டுக்கும் உள்ளானேன். அன்று முதல் நான் நான்கு சுவர்களுக்குள் எழுதிய கவிதைகளை பொதுவெளியில் வெளியிடும் துணிவு கொண்டேன். பிறகு நான் கல்லூரியில் ஒரு கவிஞனாக அறியப்பட்டேன். இக்கவிதை என்னை முழு கவிஞனாக நண்பர்களுக்கு அடையாளப்படுத்திய மறக்க முடியாத கவிதை ... தமிழின் சிறப்புகளில் ஒன்று... ஒரு எழுத்து வார்த்தைக...

உயிரே காதலில் உருகுதடி

Image
என் இளம் பருவத்தில் காதல் கவிதைகளை எழுதிக் குவித்திருக்கிறேன்.. அனைத்தும் கற்பனையாய் எழுதப்பட்டவையே என எடுத்துச் சொன்னாலும் நம்பக்கூடியவர்கள் ஒருவரும் இல்லை. எவர் என்ன சொன்னால் என்ன ... எனது படைப்புகள் ஏட்டுச் சுரைக்காய்களாய் இருந்து செல்லரித்து போய் விட விரும்பவில்லை... இது ஒரு தலைவன் தலைவியிடம் கொண்ட காதலால் பிதற்றும் கவிதை... முத்துக்கள் கோர்த்தது உன் சிரிப்பு முத்தங்கள் கோர்த்திட எனக்குள் தவிப்பு  சித்திரம் பேசும் உன் கண்கள் நித்திரை மறந்தன என் விழிகள் வருடாமல் வருடவந்த வாச மலரே - உனக்கு வரவேற்புக் கோலமிட வானவில்லை அழைக்கின்றேன். மறுக்காமல் ஏற்றுக் கொள் என்  மனமெனும் மலர்ச்செண்டை நெருக்கமாய் கேட்டுப் பார்  என் இதயத் துடிப்பில் உன் பெயர் கேட்பதை வஞ்சித்து சென்று விட நான்  உன் போல் வஞ்சியல்ல நெஞ்சைத் திறந்து சொல்வேன்  நினைவெல்லாம் நீதானென்று வர்ணணை செய்ய வார்த்தைகளைத் தேடவில்லை வரிகளை எழுத வைரங்களைத் தேடுகிறேன் சங்கீதம் கற்றுக்கொள்கிறேன் நான் - ஆம் கலகலக்கும் உன் காற்கொலுசைக் கேட்டுப்பார்! படபடக்கும் உன் இமைகளைக் கேட்டுப் பார் !...

இந்திய சுதந்திரப் பொன்விழா 1997

Image
நம் இந்திய தேசம் அடிமைத்தளையிலிருந்து 1947 ல் விடுபட்டு ஐம்பது ஆண்டுகளைக் கடந்து வீறுநடை போட்ட தருணம்...1997ல் நம் நாடே மகிழ்ச்சியாக கொண்டாடியது. அந்த "சுதந்திரப் பொன் நாள்" நாம் அடிமைத்தனத்திலிருந்து வெகு தொலைவு வெற்றிகரமாக கடந்து வந்து விட்டோம் என நமக்கு நினைவூட்டி பெரு மகிழ்ச்சியளித்த தருணம் அது. இப்போது நாம் நூற்றாண்டு கொண்டாட்டத்தை நோக்கி விரைவாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.. இந்த நேரத்தில் எனது பழைய சுதந்திரப்பொன்விழா கவிதை எக்காலத்திற்கும் பொருந்துவதை எண்ணி அசை போட்டுப் பார்க்கிறேன். அக்கவிதை இதோ! பொழுதெல்லாம் புல்மடியில்        புரண்டு போகப் புலர் காலைப் பனித்துளிகள்         புகையாய்ச் சூழ விரிகதிரோன் வருகை தர          விடிவெள்ளி பிரிவு பெற மலரேந்தும் சோலையெல்லாம்         மதுவேந்தி மயங்கி வீழ மதுவெறியில் மதிகெட்டு - கரிவண்டு         ரீங்கார முழக்கமிட மஞ்சள் கீழ் வானம்         மணப் பெண்போல் கோலமிட விரிகதிரோன் கண்ணசைவில் ...

புத்தாயிரம் ஆண்டு 2000 உறுதிமொழி

Image
புதிய புத்தாயிரம் ஆண்டு 2000 பிறந்தபோது மக்களிடத்தில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தாண்டவமாடியது. அது 21ம் நூற்றாண்டின் பிறப்பு என்பதுதான் சிறப்பு. மில்லென்னியம் ஆண்டு பிறப்பை மிக மிக உற்சாகமாக உலகமே கொண்டாடியது... அந்த குதூகல நினைவு இந்த தலைமுறை இளைஞர் நினைவில் ஒரு பசுமரத்தாணி எனலாம்...அந்த அனுபவம் அடுத்த நூற்றாண்டவருக்கு கிடைக்க போவதில்லை... அந்த 2000 அண்டு பிறப்பன்று நம் இளையதலைமுறை ஏற்க வேண்டிய உறுதிமொழிகளை பட்டியலிடும் நோக்கிலும்...எனது இளநெஞ்சில் உதித்த கனவை நனவாக்கும் நோக்கிலும் அன்று இக்கவிதையை இயற்றினேன். விடிகாலை சூரியனை மடியிலேந்தி விரிகடலின் அலைக்கரங்கள் ஆர்ப்பரிக்க; வெள்ளிப்பனி இமயச் சிகரக் கூட்டம்  வெண்மேக மென் தாடி தடவிப்பார்க்க; குயிலோசை கேட்டு குமுதமலர் கண்திறக்க; குளக்கரையில் தவளையெல்லாம் கும்மாளக் குதியலிட; ஆயிரத்தில் ஒருமுறை அவனியில் பூக்கும் 'புத்தாயிரம் ஆண்டு' பூக்கிறது இன்று!  பூவுலக நாடகத்தில் புதியதோர் அத்தியாயம்! புறப்படுங்கள் இளைஞர்களே! போதும்  இங்கு அநியாயம்! வறட்சி இதயத்து உலகோர்முன்னெ  புரட்சியில் காண்போம் புதிய பா...