எங்கள் ஊர் பெங்களூர்
பெங்களூர் வாழ் தமிழன் என்ற முறையில் இங்கே வாழ்ந்து கண்டுணர்ந்ததை கவிதையாய் கொட்டி என் மனக்குமுறலை வெளிப்படுத்திய கவிதை இது .....
எங்கள் ஊர் பெங்களூர்
பனிசூழ்ந்த காலையோ வருடும்
பணிச்சூழல் கவலையோ நெருடும் !
பகட்டும் கூத்தும் பார்த்திட திகட்டுமோ?!
பழகிடத் துணிந்தால் பணங்காசு கேட்குமே!
சூழும் நட்புக்கு பஞ்சமே இல்லை
சூழல் மாறினால் வஞ்சகம் மீறுமே எல்லை !
வீதிகள் தோறும் சோலைகள் உண்டு
விதிகளை மீறும் காளைகள் உண்டு!
மாடங்கள் யாவும் காதலர் கூடமே!
கூடிடும் யாவரும் காதலர் அல்லவே !
பதவியும் வாழ்வும் உலகத் தரத்திலே!
மதிகெட்டுப் போனால் கொளுத்துவார் துரத்தியே!
மொழியும் நதியும் இரு கண் போன்றதே!
வழியும் குருதியில் இந்தியம் இல்லையே!
இனங்கள் பலவும் இணைந்ததோர் நகரம்!
மனங்கள் மட்டும் இணையாத துயரம்.
வைஃபையும் நெட்டும் வான் எல்லாம் தவழும்..
கைப்பேசி மட்டுமே யாவரின் கவனம் !
முகநூல் நட்புக்கு முடிவுரை இல்லை
அகமகிழ் நட்பு தான் அமைவதே இல்லை!
தொலைந்த ஆடையும் களைந்த கூந்தலும்,
பெண்ணியம் போற்றலாம் கண்ணியம் போற்றுமோ?
குடிகார நட்பும் கிரெடிட் கார்டு தேய்ப்பும்
ஆணவம் போற்றலாம் ஆண்மையைப் போற்றுமோ?
பொங்கும் புதுவெள்ளம் பெங்களூர் நகரம்
புரிந்து வாழ்வோர்க்கு பூலோக சொர்க்கம்!
அன்புடன்
பார்த்தா
எங்கள் ஊர் பெங்களூர்
பனிசூழ்ந்த காலையோ வருடும்
பணிச்சூழல் கவலையோ நெருடும் !
பகட்டும் கூத்தும் பார்த்திட திகட்டுமோ?!
பழகிடத் துணிந்தால் பணங்காசு கேட்குமே!
சூழும் நட்புக்கு பஞ்சமே இல்லை
சூழல் மாறினால் வஞ்சகம் மீறுமே எல்லை !
வீதிகள் தோறும் சோலைகள் உண்டு
விதிகளை மீறும் காளைகள் உண்டு!
மாடங்கள் யாவும் காதலர் கூடமே!
கூடிடும் யாவரும் காதலர் அல்லவே !
பதவியும் வாழ்வும் உலகத் தரத்திலே!
மதிகெட்டுப் போனால் கொளுத்துவார் துரத்தியே!
மொழியும் நதியும் இரு கண் போன்றதே!
வழியும் குருதியில் இந்தியம் இல்லையே!
இனங்கள் பலவும் இணைந்ததோர் நகரம்!
மனங்கள் மட்டும் இணையாத துயரம்.
வைஃபையும் நெட்டும் வான் எல்லாம் தவழும்..
கைப்பேசி மட்டுமே யாவரின் கவனம் !
முகநூல் நட்புக்கு முடிவுரை இல்லை
அகமகிழ் நட்பு தான் அமைவதே இல்லை!
தொலைந்த ஆடையும் களைந்த கூந்தலும்,
பெண்ணியம் போற்றலாம் கண்ணியம் போற்றுமோ?
குடிகார நட்பும் கிரெடிட் கார்டு தேய்ப்பும்
ஆணவம் போற்றலாம் ஆண்மையைப் போற்றுமோ?
பொங்கும் புதுவெள்ளம் பெங்களூர் நகரம்
புரிந்து வாழ்வோர்க்கு பூலோக சொர்க்கம்!
அன்புடன்
பார்த்தா
Comments
Post a Comment