விண்ணைத் தாண்டிய காதல்- சந்திரயான் -2

இன்று 22 July 2019 நம் நாடு நாம் அனைவரும் பெருமை கொள்ளும் சரித்திர சாதனையாக நிலவுக்கு சந்திரயான் - 2 என்னும் விண்வெளி ஓடத்தை வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. மேலும் அதை நிலவின் பரப்பில் இறக்கி சாதனை படைக்க காத்திருக்கிறது... அதன் பொருட்டு என் வாழ்த்து மடல் இது...



இளமதிமேல் மையல் கொண்ட
இந்தியரின் தூதுவனாய்- நம்

இளவயது கனவுகளை
ஏந்தி வரும் மலர்க்கணையாய் !

சோறூட்டும் அன்னை நிலா
மடி சேரும் மழலைகளாய் !

விண்ணைத் தாண்டி நம்காதல்
வெண்ணிலவைத் தொட்டது இன்று !

அன்னை மடிபோய் விழுந்தாய் விக்ரம்!
அந்த நொடி நின்று போனதே இதயம்!

சென்று சேர்ந்த உன் தகவல் வருமா?
கன்றுகள் கேள்விக்கு என்ன நாங்கள் சொல்ல?

ஒன்று மட்டும் உறுதி செய்தாய் நன்று!
என்றுமிலா வேட்கையுடன் எமதுமனம் இன்று!

அறிவியல் சிறகை விரித்தது நாடு
அடிமை மாயைகள் அகன்றதே இன்று!

இந்தியச்சாதனைக்கு ஏது எல்லை ?
சந்திரயானுக்கு ஈடு இணை யில்லை!

கவிஞர்: கோ.பார்த்தசாரதி

Comments

Post a Comment

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

தாமரையின் காதல்

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்