கொரோனா ஒழியும்!
COVID 19 NOVEL CORONA VIRUS நோய் சீனாவின் ஊஹான் மாநிலத்தில் பரவத் தொடங்கி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று உலகெங்கும் பரவத் தொடங்கி உலகையே அச்சுறுத்திய நேரத்தில் எழுதப்பட்ட என் கவிதை
கொரோனா ஒழியும் மனிதா!
கொள்ளைநோய் நமக்கு புதிதா?
மரணத்தை வெல்வோம் எழுந்துவா
மாற்றம் காணட்டும் இந்தியா!
இருமலும் தும்மலும் கேடு
உடனே முகத்தை மூடு
இருகரம் கூப்பி வணங்கு
இடையிடை கைகளைக் கழுவு
பொதுவில் இருமினால் பரவும்
பொறுப்புடன் தூய்மையைப் பேணு
குடிப்பதால் ஒழியாது கொரோனா
குசும்புக்கு இதுதான் நேரமா?
முகத்தில் கவசம் மாட்டு
அகத்தில் துணிவே மருந்து!
காய்ச்சலும் இருமலும் இருந்தால்
அலட்சியம் செய்யாதே நண்பா!
மருத்துவ மனைதனில் அடங்கு
தெருக்களில் திரியாமல் முடங்கு.
பொதுநலம் ஒன்றே மருந்து
தனிநபர் ஒழுங்கே தீர்வு !
பொதுவில் உமிழ்தல் தவறு
போதும் தவறை உணரு!
பலரும் தொட்ட பொருளில்
பலநாள் வாழுமாம் கிருமி!
கண்ணும் மூக்கும் வாயும்
கைகளால் தொடுவதால் நோயாம் !
மனிதனை மாய்க்கும் எதிரி
கண்ணுக்கு தெரியாத கிருமி!
எத்தனை வந்தால் என்ன
ஏழாம் அறிவால் வெல்வோம்!
கொரோனா ஒழியும் மனிதா!
கொள்ளைநோய் நமக்கு புதிதா?
மரணத்தை வெல்வோம் எழுந்துவா
மாற்றம் காணட்டும் இந்தியா!
இருமலும் தும்மலும் கேடு
உடனே முகத்தை மூடு
இருகரம் கூப்பி வணங்கு
இடையிடை கைகளைக் கழுவு
பொதுவில் இருமினால் பரவும்
பொறுப்புடன் தூய்மையைப் பேணு
குடிப்பதால் ஒழியாது கொரோனா
குசும்புக்கு இதுதான் நேரமா?
முகத்தில் கவசம் மாட்டு
அகத்தில் துணிவே மருந்து!
காய்ச்சலும் இருமலும் இருந்தால்
அலட்சியம் செய்யாதே நண்பா!
மருத்துவ மனைதனில் அடங்கு
தெருக்களில் திரியாமல் முடங்கு.
பொதுநலம் ஒன்றே மருந்து
தனிநபர் ஒழுங்கே தீர்வு !
பொதுவில் உமிழ்தல் தவறு
போதும் தவறை உணரு!
பலரும் தொட்ட பொருளில்
பலநாள் வாழுமாம் கிருமி!
கண்ணும் மூக்கும் வாயும்
கைகளால் தொடுவதால் நோயாம் !
மனிதனை மாய்க்கும் எதிரி
கண்ணுக்கு தெரியாத கிருமி!
எத்தனை வந்தால் என்ன
ஏழாம் அறிவால் வெல்வோம்!

Comments
Post a Comment