சுதந்திரம் நமக்கு நிரந்தரம்
விடிகாலைப் பொழுது இங்கு
விடிவெள்ளி முளைத் தெழுந்து
இனிதாகக் குயில் இசையில்
இழைந்தோடி தென்றல் வர
இதுவரையில் இருந்த இருள்
இனி இங்கு நிலைபெறுமோ?!
தொடுவானம் சிவந் தெழுந்து
துளிர்க்கிறதே புதுக் கனவு
இனி ஒருநாளும் துன்பமில்லை
ஒழிந்திடுமே சூழும் தொல்லை
துயில் களைந்து எழுமனமே!
துணிவே நம் துணைவருமே!
அன்று பிறந்த சுதந்திரம்
என்றும் நமக்கு நிரந்தரமே!
பிறநாட்டு பொருள் எதற்கு?
திறம் வளர்த்து உருவாக்கு
உழுது உண்ணும் விவசாயம்
தொழுது உயர்த்தும் வழிதேடு
தடம்மாறும் இளைஞர் கூட்டம்
தரம் உயர்த்தி வேலைகொடு
மதமாயப் பூசல் எல்லாம்
மனிதர்க்கு வேண்டாம், கேடு!
இந்தியக் கல்வித் தரமே
இனி உலகின் தரமென்றாக்கு
பாரதப் புதல்வரே இனி
பாரின் வேந்தர் என்றாக்கு.
துயில் களைந்து எழுமனமே!
துணிவே நம் துணைவருமே!
அன்று பிறந்த சுதந்திரம்
என்றும் நமக்கு நிரந்தரமே!

Comments
Post a Comment